11 Aug 2015

தேர்தலில் எங்களுடைய வாக்காளர் பெருமக்கள் மிகவும் மன உறுதியோடு கொள்கைப்பற்றோடு வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள்.

SHARE

இம்முறை நடைபெறயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் இனத்தின் மரியாதையை காப்பாற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே தங்களின் வாக்கென்று எமது தமிழ் மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
சித்தாண்டி பொதுச்சந்தை கட்டடத் தொகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களை பெறுவதற்கு பிரயத்தனங்களைச் செய்து கொண்டு வருகின்றது. 

அதனால் கிராமங்கள் தோறும் நாங்கள் செல்கின்றபோது எங்களுடைய தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெற்ற மக்களாகவும் எழுச்சிபெற்ற மக்களாகவும் காணப்படுகின்றார்கள்.
நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய வாக்காளர் பெருமக்கள் மிகவும் மன உறுதியோடு கொள்கைப்பற்றோடு வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள். 
எங்களுடைய மக்கள் திகிலிவெட்டையில் இருந்தாலென்ன அத்தோடு புலிபாய்ந்தகல், பனிச்சங்கேணி, பாவற்கொடிச்சேனை, காக்காச்சிவெட்டை எந்த இடங்களில் இருந்தாலென்ன அவர்கள் எல்லோரும் முடிவெடுத்துவிட்டார்கள் எங்களுடைய வாக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் என அவர்கள் திடசங்கற்பம் கொண்டிருப்பதை நான் செல்கின்றபோதெல்லாம் அறியக்கூடியதாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: