திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் அறுபதாயிரத்திற்கு மேலாக வாக்களிக்கும் பட்சத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எமது பூர்வீக நிலமான திருகோணமலையில் முதல் நிலையில் இருந்த நாங்கள் இன்று விகிதாசார அடிப்படையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது இருப்பை நிலைநாட்ட நாங்கள் எங்கள் பிரதிநிதித்துவத்தை இங்கு பலப்படுத்த வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒற்றுமையாக எமது வாக்கை தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு அளிப்பதன் மூலம் இரண்டு ஆசனங்களை பெறலாம் ஆனால் எமது வாக்கு வீதம் குறைந்தால் அது சாத்தியமற்றதாகிவிடும்.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி.
சம்பூரில் மக்கள் குடியேறலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பு சம்மந்தமான மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.......
கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் 7000 க்கு அதிகமான வாக்குகள் தமிழ் மக்களுடையது என்பது ஒரு மன வேதனையான விடயமாகும்.
எனவே கடந்த கால தவறுகளை திருத்திக்கொள்ள விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியுள்ளது அத்துடன் வாக்களிக்கு வீதத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment