மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட, களுமுந்தன்வெளிக் கிராமத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலையின் விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இவற்றினை புணரமைத்துத்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என களுமுந்தன்வெளிக் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது கிராமத்தில் ஒரே ஒரு பாலர் பாடசாலைதான் உள்ளது, எமது கிராமத்தின், சிறார்கள், விளையாடுவதற்காக பாலர் பாடசாலை வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த விளையாடு சாதனங்களும், விளையாட்டு மற்றமும் மிக நீண்ட காலமாக பழுதமைந்து தூர்ந்துபோய்க் கிடக்கின்றன.
எனவே இவற்றினைக் கருத்தில் கொண்டு எமது கிராம சிறார்களின் அடிப்படை அறிவை வளர்க்கும் முகமாகவும் களுமுந்தன்வெளி பாலர் பாடசாலையில் தூர்ந்துபோய்க காணப்படும் விளையாட்டு சாதனங்களை புணரமைத்துதர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் முன்வர வேண்டும் என களுமுந்தன்வெளி கிராமத்தின் அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ந.தசரதன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment