நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
வாக்களிக்கும்பட்சத்தில் இம்முறை இரண்டு ஆசனங்களை கைப்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எம்முடைய வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டாலோ அல்லது வாக்களிக்காமல் வீட்டில் முடங்கி இருந்தாலோ அவ்வாறான எமது வாக்குகள் எமக்கு எதிரான கட்சிகளுக்கே ஆசனங்களை பெற உதவும் எனவே எல்லோரும் ஒரே குடையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியது எமது கடமையாகும்.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் கென்றி மகேந்திரன் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்……….
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு வழிகளிலும் புறக்கணிக்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. எமது தேவைகள் பல இன்னும் நிவர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன என்றார்.
0 Comments:
Post a Comment