16 Jul 2015

இரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்படவில்லை: பூ.பிரசாந்தன்

SHARE

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கொழும்பு இரகசிய பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கத்தோலிக்க ஆலயமொன்றின் முன்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணை நிமிர்த்தமே அவர் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் காலத்தில் எமது கட்சியின் மீதும் எமது தலைவர் மீதும் சேறு பூசும் செய்தியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். எமது தலைவரை இரகசிய பொலிஸார் விசாரணை செய்யவேண்டுமென்றால் அவர்கள் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு வந்து விசாரணை செய்யமாட்டார்கள். இரகசிய விசாரணை என்பது இரகசியமானமாகவே நடாத்தப்படும்.
ஆனால் எமது தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு இது தொடர்பிலான எந்த அழைப்பும் வரவில்லை. இது ஒரு முற்றுமுழுதான பொய்யான தகவலாகும்.
தேர்தல் காலம் என்ற காரணத்தினாலும் எமக்கு தமிழ் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வரும் ஆதரவினை திசை திருப்பும் வகையிலும் இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றனர்.
ஆனால் இவ்வாறான செய்திகள் மூலம் எமது வெற்றியை ஒருபோதும் யாரும் தடுத்து விட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyHSZSVnq0E.html#sthash.Oafsl3iL.dpuf
SHARE

Author: verified_user

0 Comments: