வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஸ்தலத்திலேயே இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை திருகோணமலை - சேருநுவர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தார்.
காத்தான்குடியிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அதிலிருந்த மூவர் வயல் ஒன்றுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்க்கப்பட்டனர்.
சம்பவத்தில் பலியானோரின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது காயமடைந்தவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
0 Comments:
Post a Comment