1 Jul 2015

வடகிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

SHARE

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலை வடகிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான  தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் புளொட் கட்சிசார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் தெரிவு தொடர்பாக மேற்படி சித்தார்த்தனிடம் இன்று புதன் கிழமை (01) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும்; தெரிவிக்கையில்……

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், அனைத்து கட்சிகளும், கூடி எடுக்கப்பட்ட முடிவின் படி மட்டக்களப்பு, வன்னி போன்ற மாவட்டங்களில் முடிவுகள் இதுவரை எட்டப்படவில்லை. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தளவில் திருகோணமலை, அம்பாறை, போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்து இரண்டு மாவட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட வில்லை நிற்சயமாக இரண்டு மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும் அதற்கு பிறகே வேட்பாளர் சம்பந்தமாக உத்தியோக முடிவுகள் எடுக்கப்படும். எனத் தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தாங்கள்  புளட் அமைப்பின் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்து சம்மந்தமாக பல செய்திகள் வெளிவந்தமுள்ளன என அவரிடம் வினவியபோது….

இதுவரை மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எந்தவெரு நபரையும் எமது கட்சிசார்பாக நிறுத்துவதற்கு முடிவுவெடுக்க வில்லை. என்னுடன் பலபேர் தொடர்பு கொண்டு சந்தர்ப்பம் தருமாறு கேட்கின்றனர் இதேபோன்றுதான் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் நேரில் வந்து தன்னை  வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 

இதன்போது அவருக்கு எந்தவித்திலும் உறுதியளிக்க வில்லை, இருந்தும் அவரை நான் இம்முறை வேட்பாளராக நியமித்ததாக செய்திகளை நான்பார்க்கின்றேன். இது எந்த விதத்திலும் உண்மையில்லை.  

இச் செய்தியின் பின்னர் மட்டக்களப்பில் இருந்து சிலகட்சிகளின் எதிர்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளது. காரணம் அவர்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் முன்னர் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் இவ் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏனைய கட்சிகளை புறந்தள்ளி கூட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் எந்தவித முடிவினையும் எமது கட்சி எடுக்காது, என்பதனை நான் உறுதியாக கூறிவைக்க விரும்புகின்றேன். 


மற்றும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் இறங்கவுள்ளதால் இத் தொகுதியில் எமது கட்சிசார்பாக வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறுதொகுதியில்தான் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எமது கட்சியின் மட்டக்களப்பு கிளை மேற்கொண்டு வருகின்றது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தாரர்.

SHARE

Author: verified_user

0 Comments: