எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கோட்டைக்கல்லாற்றை சேர்ந்த திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராசாவை களமிறக்குவதற்காக பலகிரமாத்தினை சார்ந்த மக்கள் ஒன்றிணைந்து அயராத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கோட்டைக்கல்லாறு பெரியகல்லாறு துறைநீலாவணை ஒந்தாச்சிமடம் மகிழூர் மகிழூர்முனை எருவில் களுதாவளை கோவிற்போரதீவு ஆகிய கிராமத்தினை சேர்ந்த மக்கள் அனைவரும் கூட்டகாச் சேர்ந்தே இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்
இதன் ஒரு கட்டமாக இலங்கைத் தமிரசுகட்சியினுடைய செயலாளர் நாயகம் கி.துரைராஜசிங்கத்திடம் சென்று தங்களது ஏகோபித்த விருப்பத்தினை தெரிவித்ததுடன் மேற்படி திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராசாவை களமிறக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இக் கோரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும்இ கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கத்திடம் வினாவியபோது என்னை வந்து சந்தித்து மேற்படி பாக்கியராசாவை திர் வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் களமிறக்கு வதற்கான கோரிக்கையை முன்வைத்தனர் இந்த விடயத்தில் நான் தனித்து முடிவெடுக்க முடியாது இதற்கான முடிவினை வேட்பு மனுக்குழுவே மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்
இம் முறை இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த வேட்பாளர்களின் மனுக்களே கூடுதலாக கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment