மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையினால் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகள் சம்பந்தமாக மாணவர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வு மண்டூர் மகாவித்தியாலயத்தில் செவ்வாய் கிழமை (30) நடைபெற்றது
செவ்வாய் கிழமை காலை ஒன்று பாடசாலை கூடலின் போது நடைபெற்ற இந்நிகழ்வில் வெல்லாவெளி பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொறுப்பதிகாரி கே.விக்கிரமசிங்க கலந்து கொண்டு மாணவர் மத்தியில் போதைப் பொருள் பாவனையால் பிரதேசங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் சம்மந்தமாக தொளிவான முறையில் முன்வைத்து விளக்கமளித்தார்.
மாணவர்கள் தங்களது வீடுகளில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும்இ பெற்றோர்களுக்கு தெளிவாக இவ் விடயங்களை எடுத்துக்கூறி மதுவுக்கு செலவு செய்யும் பணம் எவ்வாறு வீண்விரயம் ஆகின்றது என்பதையும் அப்பணத்தினை தங்களின் கல்விக்கு செலவு செய்யுமாறு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வெல்லாவெளி பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொறுப்பதிகாரி கே.விக்கிரமசிங்க மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
0 Comments:
Post a Comment