தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு -கல்லடி பிராந்திய முகாமையாளார் அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக (கணக்கு) கடமையாற்றிய எஸ்.கஜவீர மற்றும்) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பாமன்கடை காரியாலயத்திற்கும்,
மானி வாசிப்பு பரிசோதகராக கடமையாற்றிய எம்.எம்.றபியூதீன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்திற்கும், இடமாற்றம் பெற்று செல்வதனால் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் பிரதம இலிகிதர் ஏ.சந்திரகுமார் தலைமையில் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது இடமாற்றம் பெற்றுச்செல்லும் எஸ்.கஜவீர மற்றும் எம்.எம்.றபியூதீன் ஆகியோருக்கான நினைவூ பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.விநோதன் மற்றும், பொறியியலாளர்கள் ஏனைய உத்தியோகத்தர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.



0 Comments:
Post a Comment