இம்முறை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில், எனது பெயர் உள்வாங்கப்பட்டு தற்போது வெளியாகியிருக்கின்றமையினையிட்டு நான் அதிர்ச்சியடைகின்றேன்.
என மட்டக்களப்பு மாவட்டம், மன்முனை தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தம்பியப்பா பேரின்பராசா(ரகு) தெரிவத்துள்ளார்.
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில், தனது பெயரும் உள்ளடக்கப் பட்டுள்ளமை குறித்து அவர் வெள்ளிக்கிழமை (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு கூட்டிக் காட்டியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…
மேற்குறித்த கட்சியின் சார்பில் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு பலமுறை எனது இல்லம் வந்தனர். எனினும் அவர்களின் வேண்டுகேளுக்கு நான் சம்மதம் தெரிவிக்க வில்லை. அவர்களில் சிலர் எனது நெருங்கிய உறவினர்களாகவும், இருந்தார்கள். அவர்களது வேட்புமனு பத்திரத்தில் நான் கையொப்பமிடாது தற்போது வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் வெளிவந்துள்ளமையினையிட்டு வேதனையடைகின்றேன்.
காலத்தின் கட்டாயத்தின் மத்திக்கத்தில் நான் கடந்த காலங்களில் பல்வேறு கூட்டணிகளில் இணைந்து செயற்பட்டிருந்தாலும், 2015.07.14 அன்று முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளேன்.
எதிர்வரும் பொதுத் தேத்தலிலும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கத்தான் ஆதரவு தெரிவிக்கவுள்ளேன். இறுதி வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கத் தீர்மானித்துள்ளேன். என அவர் அந்த அறிக்கையில் கூட்டிக் காட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment