தற்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெததினம், மற்றும் கோ.கருணாகரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்து பொலிஸ் பாதுகாப்பு வியாழக்கிழமை (16) இரவு மீளப் பெறப்பட்டுள்ளதாக மேற்படி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்து பாதுகாப்பும் புதன் கிழமை (15) மீளப் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment