1 Jul 2015

மதுபானசாலைகளை மூடுமாறு கோரி மட்டில் இரு ஆர்ப்பாட்டங்கள்

SHARE
மட்டக்களப்பு - கிரான்குளம் பிரதேசத்தில் மதுபானசாலைகளை மூடுமாறு கோரி இரண்டு ஆர்ப்பாட்டங்கள்  (28) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றன. 

குருக்கள் மடம் ஐயனார் ஆலயத்திற்கு முன்பாகவும், கிரன்குளம் விவேகானந்தா கல்வி நிலையத்திற்கு முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

கிரான்குளம் பொதுமயானத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் ஒரு மதுபானசாலையும், விவேகானந்தா கல்வி நிலையத்திற்கு அருகில் இன்னுமொரு மதுபானசாலையும் உள்ளது. இவற்றினை மூடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். 

உடலை புதைக்கும் புனித ஸ்தலத்திற்கு அருகில் மதுபானசாலை வேண்டாம், கல்வி நிலையத்திற்கு அருகிலுள்ள மதுபானசாலையால் மாணவர்களின் கல்வி சீரழிகின்றது என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடத்தில் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றை நாம் திராவிடர் கட்சியின் தலைவர் கே.மோகனிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். 

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் நான்கு மதுபானசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
SHARE

Author: verified_user

0 Comments: