31 Jul 2015

வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் ஜநனாயக ரீதியான தேர்தல் நடப்பதற்கான அவதானிப்பினை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

SHARE

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் மாறி வந்த அரசாங்கங்கள், தமிழ் மக்களை ஏமாற்றியதே வரலாறாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மாங்கேணியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் ஜநனாயக ரீதியான தேர்தல் நடப்பதற்கான அவதானிப்பினை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.


குறிப்பாக கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள 40சதவீத மக்களின் விகிதாசாரத்தை அடையக் கூடியவாறு, இந்த 40சதவீத பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் மத்திய அரசாங்கத்திடம் உரத்துச் சொல்லக் கூடிய சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் என்பது திண்ணம்.

எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்களைத் தெரிவு செய்ய வேண்டுமானால் தமிழத்; தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: