26 Jul 2015

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்போ, அல்லர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ அல்ல, ஐக்கிய தேசியக் கட்சிதான

SHARE

ஐக்கிய தேசியக் கட்சி இந்த பொதுத் தேத்தலில் மாபெரும் வெற்றிபெற்று தனிக் கட்சியாக புதிய அரசை அமைக்கவுள்ளது.  அந்த அரசாங்கதிலே மூவின மக்களும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்க வேண்டும் என எமது கட்சியத் தலைவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார்.

என முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கடசியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் தேர்ததல் பிரச்சாரக் காரியாலயம் ஒன்று சனிக்கிழமை மாலை (25) புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் திறந்து வைத்துவிட்டு பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

எமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுதான் உத்தியோக பூரவமாக புதுக்குடியிருப்புக் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  எமது பிரச்சாரம் வெற்றியளிக்கும், எமக்கு மக்கள் அதரவு கிடைக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

இந்த தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகமுக்கியமான தேர்தலாகும். கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட மாபெரும் அரசியல் புரட்சியின் பின்னர் நாட்டியில் புதிய அரசாங்கம் மலர்ந்திருக்கின்றது. 

மஹிந்த ராஜபக்சவிக் அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கிலே சென்று கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியைத் தகர்ததெறிந்து இலங்கை மக்கள் ஒரு புதிய ஆட்சிக்கு வழிசமைத்துள்ளார்கள். இவ்வாறு புதிய அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேத்திருக்கா விட்டால் நாட்டில் சர்வாதிகாரப் போக்கு இன்னும் மேலோங்கிக் காணப்பட்டிருக்கும். மஹிந்த அரசு சிறுபான்மையின மக்களை நசுக்கி வந்துள்ளது.  

ஐக்கிய தேசிக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர் இந்த நாட்டிலே மக்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும், மனித உரிமைகள் பேணப்பட வேண்டும், மத சுதந்திரங்கள் போன்ற விடையங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற நோக்குடன் செயற்படுபவர். எதிர் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறுதான் செயற்படுவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.

தற்போதைய அரசு 100 நாள் வேலைத் திடத்தின் கீழ் 19 வது அரசியல் திருத்தச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டுள்ளது. இதில் பல ஆணைக் குழுக்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அரசியல் சபை ஏற்படுத்தப் பட்டுள்ளது.  பொலிஸ் ஆணைக்குழுவும் கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப் பட்டிருந்தன ஆனால் தற்போது அனைத்து ஆணைக் குழுக்களும் சுதந்திரமாக இயங்குவதற்கு வழிவகுக்கப் பட்டுள்ளன. ஐக்டகிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள முற்போக்கு வாதிகளுமே இவ்வாறான மாற்றத்திற்கு காரணமாகும். இந்த மாற்றம் நிலையான மாற்றமாக இருக்க வேண்டும். 

ஐக்கிய தேசியக் கட்சிய இந்த பொதுத் தேத்தலில் மாபெரும் வெற்றிபெற்று தனிக்கட்சியாக புதிய அரசை அமைக்கவுள்ளது.  அந்த அரசாங்கதிலே மூவின மக்களும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்க வேண்டும் என எமது கட்சியத் தலைவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் மிகவும் அவதானுத்துடனும், நிதானத்துடனும் கையாள வேண்டும். என்னை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்தால் பல்லாயிரக்கணக்கான நிதியுதவிகள், வேலைவாய்ப்புக்கள், போன்ற பல்வேறு நன்மைகளை மட்டக்களப்பு மக்கள் அடைவார்கள். 

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்படன் செயற்படுவதற்கு உறுதிபூணுகின்றேன்.

சுமார் 68 வருடகாலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்து வருகின்றார்கள்.  அவர்கள் அதிகார பரவலாக்கல், யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆகிய இரண்டு விடையங்களை வைத்துத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது.  இந்த இரண்டு விடையங்களையும் வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பூதாகரமாக்கிய அப்பாவி மக்களை ஏமாற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்து வருகின்றது. 

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்போ, அல்லர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ அல்ல, ஐக்கிய தேசியக் கட்சிதான் இதனை முன்வைத்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாமாளுமன்றில் இப்பிரச்சனைகளைக் கதைப்பதில்லை, தேர்தல் காலத்தில் மாத்திரம் கிராமங்களில் சென்று மக்கள் மத்தியில் மட்டும்தான் கதைக்கின்றார்கள். இதுதான் உண்மை. இவற்றை எமது மக்கள் உணர்ந்து செயற்பட்ட வேண்டும், என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

1 Comments:

Mukunthan said...

https://www.facebook.com/pages/Somasundaram-Ganeshamoorthy/863770150338624?fref=ts
நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்