தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர் தேர்வு பூர்த்தியடைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
பெரும் இழுபறியின் மத்தியில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு வியாழக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாவை தலைமை வேட்பாளராக கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம் ( ஈ.பி.ஆர்.எல்.எப்),கோவிந்தன் கருணாகரம் ( ரெலோ) மற்றும் புதிய முகங்களாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவி கல்விப்பாளராக கடமையாற்றிய எஸ்;.சிறிநேசன்,பிரபல தமிழ் ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் (புளோட்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.சௌந்தரராஜன் ஆகியோர் களமிறங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி பட்டிருப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் மற்றும் ரெலோ சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் போட்டியிடவுள்ளதுடன் மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிநேசனும், கு.சௌந்தரராஜனும்,ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணமும் போட்டியிடவுள்ளதுடன் கல்குடா தொகுதியில் தமிழரசுக்கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் புளோட் சார்பாக பிரபல தமிழ் ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் ஆகியோரும் களமிறங்கவுள்ளதாக தெரியவருகின்றது.
0 Comments:
Post a Comment