9 Jul 2015

மட்டு மாவட்டத்தில் 09 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

SHARE

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (08) புதன்கிழமை மாலை வரையில் 9 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
இருப்பினும் எந்தவொரு கட்சியோ, சுயேச்சைக்குழுவோ வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை 3 சுயேட்ச்சைக் குழுக்களும், திங்கட்கிழமை 2 குழுக்களும், செவ்வாய்க்கிழமை 3 குழுக்களும், புதன்கிழமை ஒரு சுயேட்சைக்குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி  நடைபெறவுள்ள ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் , பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பில் 199 நிலையங்களும் , கல்குடாவில் 115 நிலையங்களும்,    பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த ஜூன் 26 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து  2015 பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: