நாங்கள் தமிழனாக வாழ்கின்றோம் என்று கூறுவதாக இருந்தால் தமிழர் கலைகலாசாரம் விழுமியங்கள் போன்றவற்றிக்கு மதிப்ளித்து அனுசரித்து வாழ வேண்டும் அல்லாத இடத்து நாங்கள் தமிழனாக வாழ்கின்றோம் என்று கூறுவதில் எந்தப்பயனும் இல்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலை அவர்கள் தெரிவித்தார்
மட்டக்களப்பு வேலழகனால் எழதப்பட்ட இரு நூல் வெளியீட்டு விழா கவிஞர் த.சேரலாதன் தலைமையில் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் நடை பெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
தாங்கள் தமிழினை பேசி வாழ்வதாலோ அதனை உள்ளத்தில் வைத்து வாழ்வதாலோ நாங்கள் தமிழனாக வாழ்கின்றோம் என்று எவரும் நினைத்து விடவும் முடியாது வாழ்ந்து விடவும் முடியாது. நாங்கள் தமிழனாக வாழ்கின்றோம் என்றால் நடைஇஉடைஇகலைஇகலாசாரம்இபண்பாடு போன்றவற்றை கடைப்பிடித்து வழ்வதனால் மாத்திரமே நாங்கள் அந்த நிலையை அடைந்து கொள்ளலாம். ஏன் இதனை நான் கூறுகின்றேன் என்றால் உலகிலே எமது தமிழ் மொழி செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது இந்ந பெருமைக்குரிய மொழியைப் பேசுகின்ற நாங்கள் அவ்வாறான புனித மொழிக்கு நாங்கள் இழுக்கேற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது
இதே போன்றுதான் எமது மதமும் தற்போது சீரழியும் நிலையில் சென்று கொண்டிருக்கின்றது இதனை ஏன் நான் கூறுகின்றென் என்றால் எமது பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் சமயமரபை மீறிய வகையில் அனவசிய செலவுகளை மேற் கொண்டு திருவழாக்கழை மிகவும் ஆடம்பரமாக நடாத்துவதை நாங்கள் காணக்கூடியதாவுள்ளது.
சில ஆலயங்கள் சாதிபாகுபாட்டினால் தற்பொழுதும் நீரழித்து கொண்டிருக்கின்றது. எமது மக்கள் அலையத்திற்கு செலவு செய்வது போன்று ஏனைய பொது விடயங்களான கல்வி கலை மற்றும் நனாவித விடயங்கள் போன்றவற்றிக்கு செலவு செய்வதற்கு முன்வருவதில்லை. ஆதனை விடுத்து முன்வந்து இவ்வாறான சேவைகளை செய்பவர்களை ஊக்கப்டுப்பதுவதும் அவ்வாறு நடப்பவர்களாக இருந்தால் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்குபற்றி இருப்பார்கள்.
இவ்வாறான செயற்படுகள் காரணமாகவே அதியும் அத்தமும் இல்லாத மதத்தையும் மொழியையும் பேசு கின்ற பின்பற்றுகின்ற நாங்கள் இந்த உலகிலே குந்தி இருப்பதற்கேன ஒருதனிநாடு தமிழனுக்கு இல்லாமல் போயுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டை எடுத்துக் கொண்டால் எமது ஆரம்ப வரலாற்றைக் கொண்ட எமது திரவிடப் பண்பாடு எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு தற்போது இந்த நாட்டின் இரண்டாம் இனமாக வாழ்கின்ற நிலமை எமக்கு ஏற்பட்டுள்ளமையை இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகின்றேன். எனவேதான் எமது மதத்திலும் மொழியிலும்இ மதத்திலும் வரலாறு தவறாது அதன் பாரம்பரியங்களை பாதுகாக்கின்றவர்களாக நாங்கள் மாறவேண்டும்.
எனவேதான் எமது கலைகலாசாரம்இ பண்பாடு. போன்றவை எதிர்காலத்தில் ஆழியாத வண்ணம் பாதுகப்பது தமிழ் மக்களாகிய எமக்கு தலையாய கடைப்பாடு உண்டு இவற்றினைக்கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் செயற்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment