மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு உளவளத் துணை தொடர்பான செயலமர்வொன்று செவ்வாய் கிழமை (30) ஓந்தாச்சிமடம் உளவளத்துணை நிலையத்தில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.பிறேமா கௌரீசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி கல்விக் கோட்த்திற்குட்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், மற்றும், உளவளத்துணை ஆசிரியர்களும் அடங்கலாக 40 ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளவளத்துணை வைத்திய அதிகாரி ரி.கடம்பநாதன், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர், கே.புவிதரன், ஆகிர் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினர்
பாடசாலை மட்டத்தில் காணப்படும் பிறள்வான பிள்ளைகளை இனங்கண்டு,
எவ்வாறு சமூகத்தில் இணைத்தல், துஸ்பிரயோகங்களைத் தடுத்தல், போன்ற பல விடையங்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டதாக மண்முனை தென் எருவில் பற்று சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர், கே.புவிதரன்தெரிவித்தார். 
0 Comments:
Post a Comment