மட்டக்களப்பு மாட்டத்தில் இந்த வருடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நாம் திராவிடர் கட்சியின் உபசெயலாளரான தட்சணாமூர்தி கமலநாதன் என்பவர், அப்பதவியிலிருந்தும், கட்சியின் சகல செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும், இராஜினாமா செய்வதாக கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனுக்கு இன்று செவ்வாய்க் கிழமை (14) கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அவர் அனுப்பிய கடித்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது….
நாம் திராவிடர் காட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம்முதல் உப செயலாளராக இருந்து செயற்பட்டு வருகின்றேன். எனக்குக் கிடைத்த இப்பதவியினை வைத்துக் கொண்டு கட்சியின் முன்னேற்றத்திற்காகவும், எமது மக்களின் தேவைகளைப் பூர்தி செய்யவும் அயராது ஈடுபட்டு வந்தேன்.
இந்நிலையில் கட்சித் தலைமையின் தன்னிச்சையான செயற்பாடுகளும், வெளிப்படைத் தன்மையற்ற செயற்பாடுகள், காரணமாகவும், தொடர்ந்து எனக்கு இப்பதவியினை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளது.
எனவே நான் இன்றிலிருந்து (14) இப்பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என அக்கடித்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்கடித்தின் பிரதி நாம் திராவிடர் கட்சின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
இவரின் பதவி விலகல் தொடர்பான கடிதம் எனக்கு இதுவரையில் கிடைக்க வில்லை என நாம் திராவிடர் கட்சின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனைத் தொடர்பு கொண்டு கோட்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment