மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்திற்குட்டபட்ட களுமுந்தன்வெளிப் பகுதியில் திங்கட் கிழமை (13) மாலை காட்டுயானைக் கூட்டம் ஒன்று உட்புகுந்ததினால் மக்கள் பொரும் அல்லோல கல்லோலப் பட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் அறுவடை நெல்லின் வாசத்திற்கு களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு அருகிலுள்ள பொது மயானக் கட்டுப் பகுதிக்குள் புந்த யானைக்கூட்டத்தினால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
யானைக் கூட்டம் குறித்த மயானக் காட்டுப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் உள்நுளைய விடாமல் கிராமத்தவர்கள் ஈடுபட்டனர்.
திங்கட் கிழமை இரவு வேளைவரை அப்பகுதியில் நின்ற காட்டு யானைக் கூட்டத்தினை அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து செவ்வாய் கிழமை (14) அதிகாலை பட்டாசு கொழுத்தி சத்தமிட்டு ஒருவாறு யானைக் கூட்டத்தினை கிராமத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இவ்வானைக்கூட்டம் திக்ககோடைப் பகுதியிலுள்ள தளவாயக் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்து.
மிக நீண்ட காலமாக இருந்து இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதையிட்டு பலமுறை உரிய அதிகரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ள போதிலும் தாம் தொடர்ந்து யானைகளின் அச்சத்தின் மத்திக்கத்தில் வாழ்ந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment