14 Jul 2015

நாடாளுமன்றத் தேர்தல் - 2015 மட்டக்களப்பு மாவட்டம்

SHARE

இம்முறை பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கிணங்க, மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும் கல்குடா தேர்தல் தொகுதியில் 1,05,056 பேரும்  பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
  


இதேவேளை, இம்மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன. அதன்படி, மட்டக்களப்பில் 199 நிலையங்களும் கல்குடாவில் 115 நிலையங்களும்    பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன

இப்பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளன. 

இதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஈரோஸ் மற்றும் அகில இலங்கை  தமிழ் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளர். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தலைமையிலும்,  

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையிலும்,

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்  முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையிலும், 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைமை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹீர் மௌலானா தலைமையிலும், 

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில், அதன் நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகைய்யா இராசமாணிக்கம் தலைமையிலுமான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளே போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வேண்டி 16 அரசியல் கட்சிகளின் சார்பில் 128 பேரும், 30 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 240 பேருமாக மொத்தம் 368    பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: