நாம் திராவிடர் அரசியல் கட்சி எமது மாவட்டத்தின் தேவை கருதி இவ்வருடம் மே மாதம் முதலாம் திகதியன்று செங்கலடி செல்லம் வாசஸ்தலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கின் அரசியல் நிலை வேறு. கிழக்கின் அரசியல் நிலை வேறு. இங்கே பெரும்பான்மையாக நாம் இருந்தும் அரசியல் அபிவிருத்திஇ சமூக முன்னேற்றம் சார்பாக எதனையும் சாதிக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். இது கடந்த கால வரலாறு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும்இ கல்வி வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் முடக்கும் சிறுபான்மையின அரசியல் வாதிகளின் ஏகாதிபத்திய அரசியலை அழித்து ஒழித்து யார் ஆட்சி அமைத்தாலும் ஆளும் அரசுடன் இணைந்து நாம் அபிவிருத்திக்கு ஆணையிடும் சக்தியாக நாம் திகழ்வோம் என்பதோடு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கடுமையாக உழைப்போம் என உறுதியளிக்கின்றோம்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன்..... மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை மீள் நிர்ணயத்தில் தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து ஒரு அங்குல நிலமும் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை..
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரச உத்தியோகத்தர்களை திட்டமிட்ட முறையில் இடம்மாற்றி தமிழர்களின் ஆதிக்கத்தை குறைக்கும் சதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
போர்க்கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு புனர்வாழ்வு இன்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கப்படும்.
போரினால் கணவனை இழந்த விதவைகட்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும். அத்துடன் மறுவாழ்வு பெறும் விதவைகளுக்கு நிலமும் குடிமனையும் வழங்கப்படும்.
குறைந்து வரும் தமிழர்களின் இன விருத்தியை அதிகரிக்க ஐந்தாவது பிள்ளையை பிரசவிக்கும் தாய்க்கு எமது கட்சியால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா சன்மான தொகையும் “வீர மாதா” பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
திராவிடர் கலாசாரம் சட்டமாக்கப்படும்.
பிரதேச செயலக பிரிவு தோறும் நவீன தொழில்பேட்டை அமைக்கப்படும்.
வேலையற்ற இளைஞர்கள் அனைவருக்கும் தொழில்பயிற்சி வழங்கப்பட்டு கடனுத விமூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
பன்குடாவெளி – நரிப்புல்தோட்டம் பாலம் அமைக்கப்பட்டு செங்கலடி நகரமாக்கப்படுவதுடன் ஆதார வைத்தியசாலையும் மத்திய பஸ் தரிப்பு நிலையமும் அமைக்கப்படும். களுவாஞ்சிகுடி வர்த்தக நகரமாக்கப்படும்.
துறைநீலாவணை மற்றும் கொடுவாமடு தொடக்கம் புல்லுமலைஇ உன்னிச்சைஇ வவுணதீவு பகுதிகட்கு இருபத்திநான்கு மணிநேர குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
தமிழ் மாணவர்கள் உயர்கல்வி கற்றலை அதிகரிக்க வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அதேநேரம் கிராமங்களிடையே பிரத்தியேக இலவச வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படும். மற்றும் ஏழை வறிய மாணவர்கட்கு வெளிவாரிஇ சட்ட படிப்பிற்கும் உதவித்தொகை தரப்படும்.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் உள்ள மண்டபத்தடி பெரும்போக பிரிவில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் பெற்றுக்கொடுக்கப்படும் கிராமியகுளங்கள் புனரமைக்கப்படும். வெருகல் கடலில் விரயமாகும் மகாவலி நீர் திசை திருப்பப்பட்டு வாகரை தரிசு நிலங்கள்இ மேட்டு நில பயிற்செய்கை ஏற்படுத்தப்படும்இ இயற்கை விவசாயம் மேம்படுத்தப் படும்.
மீன்பிடியை ஊக்கப்படுத்த ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் அறிமுகப்படுத்தப் படும். மேலதிக மானியங்களும் வழங்கப்படும்.
அரசகாணிகளில் குடியேறியோர்களுக்கு முறையான காணி ஆவணம் வழங்கப்படும். அத்துடன் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் இயற்கை சூழலை வளப்படுத்தவும் மரநடுகை விரிவுபடுத்தப்படும்.
வறிய குடும்பங்களுக்கு ஏனைய மாவட்டங்களில் உள்ளதைப் போன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலவச மின்சார விநியோகம் பெற்றுகொடுப்பதுடன் வாகரைஇ கொக்கட்டிசோலை பகுதிகட்கு மின்சார சபை அலுவலகம் அமைத்து கொடுக்கப்படும்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படும். அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச தரத்திற்கு நிகராக விளையாட்டு வீரர்களை உருவாக்குவதோடு சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை ஸ்தாபித்தல்.
கிழக்கு பிராந்திய போக்குவரத்து தலைமையகம் மீண்டும் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படும். அத்துடன் பட்டிப்பளை கரடியனாறு பகுதிகளில் பஸ் டிப்போக்கள் அமைத்து தரப்படும். அத்துடன் கரடியனாறில் புதிய பிரதேச செயலகம் அமைக்கப்படும்.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் கொள்விலையை அதிகரிக்க தொகுதிவாரியாக பாரிய நெல் அரிசி ஆலைகள் அமைக்கப்படும். மேலும் கமநல சேவை நிலையங்கள் விஸ்தரிக்கப்படும்.
செங்கல் உற்பத்தி தொழில் ஊக்குவிக்கப்படுவதுடன் விறகுவெட்டும் கூலித் தொழிலாளர்களின் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்படும். எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment