24 Jul 2015

அம்பாறையில் 90 வீதமான வாக்குகள் த.தேஇகூ க்கே நடேஸ்

SHARE
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் 90வீத வாக்ககளை இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவார்கள். இதன்மூலம் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறமூடியும் என உறுதியுடன் கூறுகிறேன் என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எம்.நடேசலிங்கம் தெரிவித்தார்.

காரைதீவில் தனது தேர்தல் பிரச்சார அலுவலகத்தினைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


தனது அதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய நடேசலிங்கம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமழ் மக்களுக்கு தமிழ் தேசியக: கூட்டமைப்பைத் தவிர வேறு கட்சிகளைப் பெரிதும் தெரியாது. துமிழ் தேசிய முன்னணியினரைப்பார்த்து யார் இவர்கள் என்று கேட்கின்றனர். ஐசக்கிள் சின்னம் சுயேச்சைக் குழுவின் சிகன்னமல்லவா என்று மக்கள் கேட்கிறார்கள். அந்தளவுக்கு அக் கட்சியை மக்களுக்குத் தெரியாமலுள்ளது.



 ஆதில் போட்டியிடுபவர்கள் அதன் சில்லுகளிலுள்ள கம்பிக்குச் சமமான வாக்குகளையே பெறுவார்களா என்று சந்தேகம் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.



தாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போது பிழை செய்வது உண்மை ஆனால் ஒரு மனிதன் வளர்ந்து பக்குவமடையும் போது தான் செய்யும் பிழைகளை அறிந்து சீர் செய்வதுடன் இனத்துக்காகவும் மொழி கலை கலாச்சாரத்துக்காகவும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.



கடந்த காலங்களில் நானும் மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தவன். முhற்றுக் கட்சிகளின் பிழைகள் துரோகம் பழிவாங்கும் தன்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பார்க்கும் போதே தெரிகிறது. நூம் குடும்பம் என்று இருந்தார் அப்பா அம்மா அக்கா அண்ணா தங்கையுடன் சண்டைபோடுவது வழமை. ஆனால் அவர்களை அழிக்க நினைப்பதில்லை. துமிழ் தேசியக் கூட்டமைப்பும் நமது ஓர் ஒற்றுமைக் குடும்பம். சுண்டை வரும் போது கதைத்துப் பேசி சீர் செய்ய வேண்டும்.


SHARE

Author: verified_user

0 Comments: