இன்புளுவன்சா தீவிர சுவாசத் தொற்று நோய் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு கற்பிணி பெண்களை காவு கொண்டுள்ளது உயிர் இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற இத்தொற்று நோய்க்கு ஆளாகாமல் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மண்டூர் பிரதேசத்திற்கான பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.விக்னேஸ்வரராஜா தெரிவித்தார்.
இன்புளுவன்சா தீவிர சுவாத் தொற்று நோய் சம்பந்தமாக மாணவர்களை அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு மண்டூர் மகா வித்தியாலயத்தில் செவ்வாய் கிழமை (23) இடம் பெற்றது இதன்போதே இந்நோய் சம்பந்தமான விடயங்களை முன்வைத்து உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மாணவர் மத்தியில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து இந்நோய் கொண்டுவரப்பட்டுள்ளது இந் நோயானது இலங்கையில் அதிவேகமாக பரவிவருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 10 கற்பிணி பெண்கள் உட்பட மொத்தமாக 38 உயிர்களை காவு கொண்டுள்ளது. இந்த நோய் விடயத்தில் நாங்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தேவையற்ற விதத்தில் இதற்கு நாங்கள் இரையாகக் கூடாது.
மட்டக்களப்பு மாவட்டத்தினையும் இந் நோய் விட்டு வைக்கவில்லை நான் அறிந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இரண்டு கற்பிணி பெண்களை இந்நோய் காவு கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. தும்முதல் மூலம் வெளிவரும் துகளினாலும், காற்றினாலும் இது வேகமாக பரவுகின்றது.
இந்நோயின் அறிகுறிகளாக காச்சல்இதலையிடி, இருமல், தசைநோ, மூக்கினால் நீர்வடிதல் போன்றன இந் நோயின் அறிகுறிகளாகும் இவ் அறிகுறிகள் இருக்கின்றவர்கள் உடனடியாக தரமான வைத்திய அதிகாரி ஒருவரை நாடவேண்டும். இந் நோயானது கற்பிணி பெண்களையும் சிசுக்களையுமே இந் நோய் அதிகமாக தாக்குகின்றது ஆஸ்த்மா நோய் இருக்கின்றவர்களும் மிக அவதானமாக இருக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment