27 Jun 2015

எதிர்வரும் நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் பற்றி களுவாஞ்சிகுடி மக்களின் தீர்மானம்

SHARE

எதிர்வரும் நாடாளுமன்றத்  பொதுத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதி வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  சட்டத்தரணி பாடும்மீன் சிறிக்கந்தராஜாவை களமிறக்குவதற்கு களுவாஞ்சிகுடி அபிவிருத்த்திச் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

மேற்படி கூட்டமானது சனிக் கிழமை(20) அவிருத்திச் சங்கத்தின் தலைவர் அ. கந்தவேள் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சார்ந்த அனைத்து பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் ஆர்வலர்கள்இ மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்திலையே தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் சம்மந்தமான கருத்துக்கள்; தற்பொழுது சூடுபிடித்து வருகின்ற நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள களுவாஞ்சிகுடி மக்கள் இவ்வாறான ஓர் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளனர்.

பாடும் மீன் சிறிக்கந்தராசா பலநெடுங்காலமாக பிரதேசத்தின் தமிழ்இகலைஇகலாசாரம் என்பன வற்றிக்கு பல அமைப்புக்கள் ஊடாக சேவையாற்றியவர் கலத்தின் சூழ் நிலையால் புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியால் வசிந்தாலும் தனது புலன் அனைத்தையும் எமது மண்ணின்பால் வைத்திருந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது

SHARE

Author: verified_user

0 Comments: