இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் என்.ரமேஸ் தலைமையில் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் வழிகாட்டலிலும் வைத்தியசாலை தாதியர்கள் பணியாளர்கள் சகிதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது கல்முனை வஸ் தரிப்பிடம் வரையும் சென்று பேரணி நிறைவுற்றது.
அதனைத்தொடர்ந்து வைத்தியசாலை கேட்போர் ஒன்று கூடலில் அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பமாகின. இங்கு 10, 5 வருடங்களாக தொடர்ந்து வைத்தியசாலையில் இரத்ததானம் செய்த அனைவரும் வைத்தியசாலை நிருவாகத்தினரால் நினைவுச்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் ரீ.நிமலரஞ்சன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரத்தத்தின் மகிமையினை வெளிப்படுத்தும் நாடகங்களும், அதிதிகளின் உரையும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment