
நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள மத்தியமுகாம் 4ஆம் கிராமம் வாணி மகா வித்தியாயலயத்தின் அதிபரான சரவணமுத்து 27வருடங்கள் ஆசிரியராக அதிபராக சேவையாற்றியவராவார். கடந்த 15வருடகாலமாக அதிபராக பணியாற்றிவந்த அதிபர் சரவணமுத்து 2009ஆம் ஆண்டுமுதல் முதலாந்தர அதிபராக பதவியுயர்வுபெற்றார்.
கலைத்துறைப்பட்டதாரியான இவர் தற்சமயம் கல்விமுதுமாணிப் பட்டப்பின்படிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் மேற் கொண்டு வருகிறார். மத்தியமுகாமைச்சேர்ந்த இவர் பாண்டிருப்பில் வாழ்ந்துவருகிறார். இவர் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமையன்று நாவிதன் வெளிக்கோட்டக்கல்விப்பணிமனையில் நடைபெறவுள்ள அதிபர்கள் கலந்துகொள்ளும் பைவத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
ஏலவே கடமையாற்றிய நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் வேறுபதவிக்கு சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கடந்த 5மாதகாலமாக நிரந்தரமாக புதிய பணிப்பாளர் நியமிக்கப்படாமலிருந்துவந்தது.
சிலகாலம் பணிப்பாளரின்றி இயங்கிய அக்கோட்டத்திற்கு இறக்காமக்கோட்ட கல்விப்பணிப்பாளர் மகுமூதுலெவ்வை தற்காலிகமாக பதில் கடமையாற்ற நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் சுட்டிக்காட்டி வந்திருந்தன.
அதற்கமைய விண்ணப்பம் கோரப்பட்டபோது இ.அதிபர் சேவை 1 ஜச் சேர்ந்த ஒரேயொருவர் விண்ணப்பித்திருந்தார். அவருக்கான நேர்முகப்பரீட்சை நேற்றுமுன்தினம் புதன்கிழமை திருமலை கல்வியமைச்சில் நடைபெற்றது.
இதேவேளை சம்மாந்துறை கோட்டக்கல்விப்பணிப்பாளர் கடந்தவாரம் இளைப்பாறியுள்ள இவ்வேளையில் தற்காலிகமாக பிரதிக்கல்விப்பணிப்பாளரொருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே நிரந்தரமான கோட்டக்கல்விப்பணிப்பாளரை நியமிக்க விண்ணப்பம் கோரி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கிழக்கு மாhகண கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வலயத்தில் இலங்கை கல்விநிருவாகத்தைச்சேர்ந்த அதிகாரிகள் ஏழு பேர் உள்ளனர். பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் ஜவருள்ளனர். புதிதாக இணைந்தவர்கள் இருவருள்ளனர்.
0 Comments:
Post a Comment