திருகோணமலை தம்பலகாமம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினரின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருடனான சந்திப்பு கடந்த புதன் கிழமை (03) தம்பலகாமம் பிரதேசத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூதூர் தொகுதிக்கிளைத் தலைவர் திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முதூர் தொகுதிக்கிளைச் செயலாளர் ஸ்ரீதர்சன், தம்பலகாமம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கடவாணை பிரதேசத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்கு உரிய இடத்திற்கு செல்ல கடற்படையினரால் அனுமதி வழங்கப்படுவதில்லை, கால்நடைகள் மூலம் பெறப்படுகின்ற பால் போன்றவற்றை சங்கத்தின் மூலம் விநியோகம் மேற்கொள்வது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது கடவாணை மேய்ச்சல் தரை தொடர்பாக பிரதேச செயலாளர் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பால் சேகரித்து விநியோகிப்பது தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment