27 Jun 2015

கோட்டையூரானின் கூத்துக்கள் ஏழு எனும் நூல் வெளியீடு.

SHARE

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த கலாநிதி க.மதிபாஸ்கரன் எழுதிய கோட்டையூரானின் கூத்துக்கள் ஏழு எனும் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (26) மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் வண்ணக்கர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு நீர்ப்பாசனம் பொறியியலாளர் எந்திரி எஸ்.மோகனராஜா, களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், உட்பட இலக்கியவாதிகள், கவிஞர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நூலின் நயவுரையினை எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜாவும், கே.ரவியும், வழங்கினர். நூலின் முதற் பிரதியினை நூலாசிரியரான கலாநிதி  க.மதிபாஸ்கரனிடமிருந்து, எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் பெற்றுக் கொண்டார்.



















SHARE

Author: verified_user

0 Comments: