27 Jun 2015

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

SHARE

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 
 
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளிவரவிருக்கும் அந்த விசேட வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதனால் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
SHARE

Author: verified_user

0 Comments: