27 Jun 2015

முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மன் ஆலய வசந்த உற்சவம்

SHARE

மட்டக்களப்பு  மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனை அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான மகோற்ச பெருவிழாவின் ஆறாம் நாளாகிய நேற்று (25) வியாழக்கிழமை அன்னை முத்துமாரி அம்பாளுக்கு விசேட வசந்த உற்சவத் திருவிழா நடைபெற்றது.
அன்னை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் உற்சவ திருவிழாவின் ஆறாம் நாள் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தவனேஸ்வரி குடும்பத்தினரால் இவ் விசேட வசந்த உற்சவ திருவிழா நடைபெற்றது. விஸ்வலிங்கம் தவனேஸ்வரி குடும்பத்தினரால் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சண்டேஸ்வர் விக்கிரகம் ஆலயத்திற்கு வழங்கப்பட்டு விசேட கிரியை மற்றும் கும்பாபிஷேகம் என்பனவும்  நடைபெற்றன.

இரவு நடைபெற்ற அன்னை முத்துமாரி அம்பாளுக்கு உரித்தான வருடத்திற்கு ஒருதடவை உற்சவ தினத்தன்று எடுக்கப்படும் வசந்த உற்சவ பெருவிழாவில் விசேட பூசைகள் நடைபெற்றதும் அன்னையை மகிழ்விக்க கூடிய ஒரு நிகழ்வான மாணவர்களின் நடனம் ஒழுங்கு செய்யப்பட்டு வசந்த உற்சவத்தில் நிகழ்த்தப்பட்டது.

வசந்த உற்சவ விழா முடிவடைந்ததும் பிரதம சிவச்சாரியார் சபரிமலை குருஸ்வாமி, சபரீச கான வினோதன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவச்சாரியர் அவர்களினால் வசந்த உற்சவத்தின் பெருமை மற்றும் அதன் முக்கியத்துவம், ஆன்மீக சிந்தனைகள் பக்தர்கள் நடைமுறை வாழ்க்கையிலே கடைப்பிடிக்க வேண்டிய சில பல நற்கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

பின்பு வசந்த உற்சவ விழா முடிவடைந்ததும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அன்னையவள் வெளி வீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள். அன்னையவளின் உற்சவ கால தினங்களில் ஒவ்வொரு உற்சவ நாட்களும் மிகவும் சிறப்பான முறையிலே நடைபெற்று வருவதுடன் ஆலயத்தில் மதிய வேளையில் ஆலய பூசைக்கு வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: