27 Jun 2015

வலைப்பந்தாட்ட போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

SHARE

மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெற்ற 2015ம் ஆண்டுக்கான பெண்களுக்கான மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் மூன்று வயது பிரிவிலும் (15,17,19) சம்பியன்களாக தெரிவாகிய சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று (25) பாடசாலையில் நடைபெற்றது.
 அத்துடன் எறி பந்துபோட்டியில் மூன்றாம் இடத்தினையும். பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனாக தேர்வாகி மொத்தமாக ஐந்து வெற்றிக் கோப்பைகளை இப்பாடசாலைக்கு பெற்றுத்தந்த மாணவர்களுக்கும் பயிற்சியினை வழங்கிய ஆசிரியருக்கும் வலயக்கல்விபணிப்பாளர். உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர். முன்னாள் அதிபர்களும் தற்போதைய அதிபரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

குறித்த சாதனைக்கு முன்னாள் அதிபர்களான ஏ.பஞ்சலிங்கம், ரி.ரவி ஆகியோரின் வழிகாட்டுதலாலும் தற்போதைய பாடசாலையின் அதிபர் மு.பகீரதன் அவர்களின் ஒத்துழைப்புடனும், உடற் கல்வி ஆசிரியரான ஆ.சந்துருவின் துல்லியமான பயிற்சி அளிக்கப்பட்டதாலும் இச்சாதனை கிடைக்கப்பட்டது என அதிபர் பி.பகீதரன் தெரிவித்தார்.

கடந்த 2013/2014 ஆகிய வருடங்களிலும் இச் சாதனை படைக்கப்பட்டதுடன் முறையான கூடைப்பந்தாட்ட மைதானம் இல்லாத போதிலும்; கடந்த 5 வருடங்களாக பெண்கள் பிரிவில் மகாணமட்ட சம்பியன்களாக இப் பாடசாலை அணியினர் தேர்வாகியமையும் குறிப்பிடத்தக்கது.
2

3
SHARE

Author: verified_user

0 Comments: