மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்பாக (26) காலை சிறைக்கைதிகள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புனர்வு பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் இணைந்து இந்த விழிப்புனர்வு பேரணியை நடாத்தினர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.வி.எச்.பிரியங்கர மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம அதிகாரி ஆர்.மோகனராஜ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது வேண்டாம் வேண்டாம் புகைத்தல் வேண்டாம், புகைத்தலில் இருந்து விடுபடுவோம், புகைத்தல் இல்லாத இலங்கையை அமைத்துக் கொள்ள ஒன்றினைந்து செயற்படுவோம், என்பன போன்ற வசனங்கள் எழுத்பபட்ட சுலோகங்களை பேரணியில் ஈடுபட்ட சிறைக்கைதிகள் தாங்கியிருந்தனர்.
போதைப்பொருள் பாவணையால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் போதைப்பொருள் பாவணையிலிருந்து விடுபடல் போன்ற விழிப்புனர்வு துண்டுப்பிரசுரங்களும் இதன் போது சிறைச்சாலை அதிகாரிகளினால் பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment