மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாபக புதன் கிழமை (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண் ஒருவர் உட்பட 5 போர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்கதாக மட்டக்களப்ப போதனா வைத்தியாசலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.
பொத்துவில் இருந்து திருகோணமலை நோக்கின் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வாகனமே களுதாவளை பொது விளையாட்டு மைதமானத்தின் முன்னின்ற மரம் ஒன்றில் மோதியதமாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்திப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment