பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின்
அடிப்படையில் 326 ஆசனங்களை பெற்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து
2வது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தொழிற்கட்சி 230 ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 56 ஆசனங்களைப் கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பெறுள்ளது.
வெற்றி முகத்துடன் கருத்து தெரிவித்த கேமரூன், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இன்றைய நாள், மிக பலத்த நாளாக அமைந்தது என்றார்.
இதேவேளை தோல்வியை ஒப்புக்கொண்ட மிலிபாண்ட், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 316 இடங்களும், தொழிலாளர் கட்சிக்கு 239 இடங்களும் கிடைக்கும் என பி.பி.சி. கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 Comments:
Post a Comment