14 May 2015

மண்முனை தென் எருவில் பற்று விளையாட்டு விழாவில் செட்டிபாளையம் நியூட்டனும், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும் இணைச் சம்பியன்களாகத் தெரிவு.

SHARE
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச மட்ட 2015 ஆம் ஆண்டுக்குரிய விளையாட்டு விழாவின் இறுதி கடந்த செவ்வாய்க் கிழமை (12) களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 36 விளையாட்டுக் கழகங்களில் 23 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

இப்போட்டி நிகழ்வில் மெய்வலுனர் ஆண்களுக்கான நிகழ்வில் 71 புள்ளிகளைப் பெற்று களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் சம்பியனாகவும், 51 புள்ளிகளைப் பெற்று செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

இதேபோன்று பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டி நிகழ்வில் செட்டிபாளையம் நியூட்டன் விளையாடடுக் கழகம், 74 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகவும், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் 67 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் பெருவிளையாட்டுக்கள், மெய்வல்லுனர் விளையாட்டுக்களின் கூட்டாகவே over all (ஓவரோல்) சம்பியன் கணிக்கப் பட்டுள்ளது.

இதனடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச மட்டத்தில் செட்டிபாளையம் நியூட்டன் விளையாடுக் கழகமும், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும் இவ்வாண்டில் (2015) சம புள்ளிகளைப் பெற்று இணைச் சம்பியன்களானத் தெரிவு செய்யப் பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் புஸ்ப்பராஜ் ரூபராஜ் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி)  பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மண்முனை தென் எருவல் பற்று ( களுதாவளை) பிரதேச சபையின் செயலாளர் திருமதி.வ.யாகேஸ்வரி, களுதாவளை மகாவித்தியாலய அதிபர் அலோசியஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: