கடந்த ஒரு வாரகாலமாக தொண்டைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காhணமாக கடமைக்குச் செல்லாமல் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று ஞாயிற்றுக் கிழமைதான் வீட்டுக்கு வந்துள்ளார். கடைமைக்குக் செல்லாமல் விடுமுறை பெற்றுள்ளதனால், செவ்வாய் கிழமை அவரது காலைக் கடமைகளை முடித்துவிட்டு வீட்டு விறாந்தையில் உள்ள ஈசி செயாரில் உட்கார்ந்து கொண்டு ஓய்வெடுத்துள்ளார். இநிலையில் அன்றயத்தினமே முற்பகல் 10.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் 43 வயதுடைய சமூக சேவை உத்தியோகஸ்தரான சத்தியானந்தன் மதிதயன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் மதிதயனின் வீட்டுக்கு வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் மதிதயனோடு உரையாடிவிட்டு கலைந்து செல்ல முற்படுகையிலே வந்த இனந்தெரியாத நபர்கள் மதிதயன் மீது பின் தலையில் துப்பாக்கிப் பிரயோகம் மோற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் என உரிழிழந்த மதிதயனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கணவனின் நண்பர்கள் யாரோ வந்த கணவனோடு கதைதுக் கொண்டிருக்கின்றார்கள் என நினைத்துக் கொண்ட மதிதயனின் மனைவி வீட்டிற்குள்ளே இருந்துள்ளார். வெளியில் ஏதோ சத்தம் கேட்கவே ஓடிவந்து பார்தபோது கணவன் சூட்டுக் காயங்களுடன் கிடத்துள்ளார். என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடாத்தியவர்கள் யார் என்பது தொடர்பாக பொலிசால் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தற்போதைய சமாதான காலத்தில் யாரிடம் துப்பாக்கிகள் உள்ளன அவ்வாறு எழுந்தமானமாக ஒரு அப்பாவி மனித உயிரைக் காவுகொள்ளும் அளவிற்கு மிகவும் கீழ்த்தரமாக இவ்வாறு நடப்பவர்கள் யார் என மண்டூரில் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் மக்கள் திகைத்துப் போயுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment