30 May 2015

குழாய் பொருத்துனர்களுக்கான ஒருநாள் பயிற்சி நெறி

SHARE

இலங்கையில் தகுதி பெற்ற குழாய் பொருத்துனர்களுக்கு பாரியதோர் பற்றாக்குறை நிலவூகிறது.  இதனை கருத்திற் கொண்டு நிலையானதொரு நீர் வழங்கல் முறைமையை உருவாக்குவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நாடு பூராகவூம் குழாய் பொருத்துனர்களுக்கான பயிற்சி நெறிகளை நடாத்தி அவர்களை பதிவு செய்யும் வேலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒர் அங்கமாக கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட என்.வி.கியு. தராதாரமுள்ள குழாய் பொருத்துனர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை துறைசார்ந்த வளவாளர்களை கொண்டு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிறீன் காடன் ஹெட்டலில் செவ்வாய் கிழமை (26) இடம் பெற்றது.

 இதன் ஆரம்ப நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மடடக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஏ. வினோதன் கலந்து கொண்டு இப்பயிற்சி நெறியின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கினார்.

 திருகோணமலைஇ மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 28 என்.வி.கியூ.(NVQ)  தராதாரமுள்ள குழாய் பொருத்துனர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர். இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு எழுத்து மூலமான ஒரு பரீட்சை ஒன்று நடைபெற்தொடு மட்டக்களப்பு தொழில் நுட்ப கல்லுரியில்  செய்முறை பயிற்சியும் இடம் பெற்றன. இதுபோன்ற தொடர் பயிற்சிகள் ஏதிர் காலத்திலும் இடம் பெறவூள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மடடக்களப்பு மாவட்டகாரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 




SHARE

Author: verified_user

0 Comments: