30 May 2015

கண்ணகியம்மன் கும்மிப்பாடல் இறுவெட்டு வெளியீடு.

SHARE


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணகியம்மனைப் பற்றிய கும்மிப்பாடல் அடங்கிய இறுவெட்டு செவ்வாய் கிழமை மாலை களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசைபத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் இடம்பெற்ற இவ்இறுவெட்டு வெளியீட்டு நினழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாககாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாள் எம்.கோபாலரெத்தினம், உட்பட கிராம பெரியொர்கள், பொதுமக்க்ள என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இறுவெட்டின் முதற் பிரதியினை களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசைபத் தலைவர் அ.கந்தவேளிடமிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாககாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை பெற்றுக கொண்டார்.

இவ் இறுவெட்டின் பாடல் வரிகளை வைத்தியக் கலாநிதி ப.சதீஸ்குமார் இயற்றியுள்ளார், சிவத்திரு.தரிஷனன் குருக்கள் இதனைப் பாடியுள்ளார், இதற்கு அ.செல்வக்குமார் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: