பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 9 ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் கிழமையன்று (28) பாற்குடப் பவனி இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆலய குருக்கள், நிருவாக சபையினர், உள்ளிட்ட பக்தர்கள் பாற்குடம் ஏந்தி பட்டிருப்பு பிரதான வீதி வழியாச் சென்று
பின்னர் மூல மூர்த்தியாகிய பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபைத்தலைவர் இ.ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான பக்கதர்கள் கலந்து கொண்டதுடன், கிரியைகளை சிவ ஸ்ரீ இரா.கு.குருக்கள் நடாத்தினார்.
0 Comments:
Post a Comment