29 Apr 2015

தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகள் கட்சியின் தொழிலாளர் தினம்

SHARE
தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகள் கட்சி ஏற்பாடு செய்துள்ள உலக தொழிலாளர் தினம் எதிர் வரும் மே மாதம் 1 ஆம் திகதி, மட்.முறகொட்டாஞ்சேனை ஞான ஒளி விளையாட்டு மைதானத்தில் பி.ப. 4 மணிக்கு தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றய தினம், பி.ப. 2 மணிக்கு தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலிருந்து வாகன ஊர்திப் பேரணி ஆரம்பமாகி மட்.முறகொட்டாஞ்சேனை ஞான ஒளி விளையாட்டு மைதானத்தைச் சென்றடையவுள்ளது.

இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்தோடு, தொழிலாளர் தின உரை, தொழிலாளர்கள் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளதாக தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று புதன் கிழமை (29) அறிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: