13 Apr 2015

கிழக்கு மாகாணத்தில் அனேகமான பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் தான் இயங்கிவருகின்றன – கல்வி அமைச்சர்

SHARE
கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தளவில் அனேகமான பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் தான் இயங்கிவருகின்றன. ஆனால் சில பாடசாலைகளில் வளங்கள் கூடுதலாக காணப்படுகின்றன.
என கிழக்குமாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்  வியாழக் கிழமை (09) விஜயமொன்றினை மேற்கொண்டு இருந்தார். இதன்போது அப்பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

சில பாடசாலைகளில் வளங்கள் இருந்து அதனை பயன்படுத்தும் தன்மை குறைவாக காணப் படுகின்றது. இவை அனைத்தையும் நான் நேரடியாக சென்று அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இருக்கின்ற வளத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எது எவ்வாறக இருந்தாலும் அதிக பாடசாலைகள் பாரிய வழப்பற்றாக்குறையுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு அமைவாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
அந்த வகையில் இந்த களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்திற்கு மிகவும் முக்கியமாக தேவையாகவுள்ள விடயங்களை நான் அவதானித்துள்ளேன். அவற்றினைத் தீர்த்து வைக்க நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன் எனத் தெரிவித்தார்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் இந்த விஜயமானது பாடசாலை சமுகத்தின் வேண்டுதலுக்கு அமைவாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளையின்  அழைப்பின் போரில் இடம்பெற்றிருந்தது.

இந்த விஜயத்தின் போது வருகைதந்த கல்வி அமைச்சரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை கோ. கருணாகரம், மற்றும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், பாடசாலை அதிபர் த.கனகசூரியஙம், மற்றும், ஆசிரியர்கள், மாணவரகள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் அகியோர் கலந்து கொண்டு அமைச்சரை வரவேற்றனர்.

கல்வியமைச்சர் களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்திருந்த விசேட பூஜை நிகழ்வில் கலந்து கொண்டதையடுத்து  பாடசாலை சென்ற அமைச்சர், பாடசாலை வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டு அங்கு வருகை தந்திருந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருடன் கலந்துரையடியதுடன் சங்க செயலாளரினால் முன்வைக்கப்பட்ட குறை நிறைகளை கேட்றிந்து கொண்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: