6 Apr 2015

நீராபத்து தணிப்பு பயிற்சி.

SHARE
நீராபத்து தணிப்பு இரண்டாம் கட்ட பயிற்சி நெறியொன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் நடைபெறுகின்றது. வியாழக்கிழமை (02) ஆரம்பித்துள்ள இப்பயிற்சிநெறி திங்கட் கிழமை (05) நிறைவு பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச சேர்ந்த 24 தொண்டர்கள் இப்பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதில் பயிற்சி பெற்று வெளியேறும் தொட்ண்டர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள், மற்றும் அதிக மக்கள் நடமாட்டமுள்ள நீர் தேக்கங்கள் போன்றவற்றில், கடமையிலீடு படுத்தப்படவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேமகுரார் கூறினார்.

இதில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர்கள் இப்பயிற்சியினை தொண்டர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதில் பயற்சி பெற்று வெளியெறும் தொட்டர்களுக்கு தேசிய உயிர் காப்பு நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பெறுமதி வாய்ந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி பெற்று வெளியேறும் இத்தொண்டர்களுக்கு உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும்  அதிகளவு தொழில் வாயப்பு கிடைக்கும் எனவும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் மேலும் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: