அதிகாலையில் கிராமத்தினுள் புகுந்த 8 அடி நீளமுடைய முதலையொன்றை மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று திங்கட் கிழமை (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவர் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவிப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில் பாரதிபுரம் எனும் கிராமத்தினுள் திங்கட் கிளமை அதிகாலை 1.30 மணியளவில் 8 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்துள்ளதனால் மக்கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
கிராமத்தினுள் புகுந்த இம்முதலை அங்குள்ள பெரிய மடு ஒன்றில் விழுந்து முதலை வெளியேற முடியாமல் இருந்துள்ளது.இச்சம்பவர் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவிப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில் பாரதிபுரம் எனும் கிராமத்தினுள் திங்கட் கிளமை அதிகாலை 1.30 மணியளவில் 8 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்துள்ளதனால் மக்கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பில் கிராம மக்கள் வன ஜுவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திற்கு அறிவித்ததனையடுத்து. அவ்விடத்திற்கு வருகை தந்த வன ஜுவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் தலைமையிலான குழுவினர் முதலையை மடக்கிப் பிடித்து திங்கட் கிழமை (06) அதிகாலையே மட்டக்களப்பு வாவியில் விட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் கூறினார்.
கடந்த 29 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓந்தாச்சிமடம், மற்றும் ஏறாவூர் ஆகிய கிராமங்களிலும் புகுந்த முதலைகள் மேற்படி வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மடக்கிப் பிடிக்கப்பட்டமை குறப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment