9 Mar 2015

சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்.

SHARE
சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி ஞாயிற்றுக் கிழமை (08) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது அவர் வைத்தியசாலை நிருவாகத்தையும், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவையும் சந்தித்து இவ்வைத்தியசாலையில் காணப்படும் குறை நிறைகள் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

வைத்தியசாலையின் தற்போதைய நிலமை குறித்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் அமைச்சரிடம் விளக்கிக் கூறினார்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வையத்திசாலையில் காணப்பட்டுவரும், மகப்பேற்று விடுத்தியை கட்டிமுடிக்கப்படாமலுள்ளது, வைத்தியர்களுக்குரிய தங்குமிடம் இல்லமை, மருந்தாளர் பற்றாக்குறை, மருத்துவ ஆய்வுகூட தொழில் நுட்பவியலாளர் இல்லை, வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை, தளபாடங்கள் பற்றாக்குறை, போன்ற பல குறைபாடுகள் தொடர்பாக மேற்படி அமைச்சரிடம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் எடுத்துரைத்தார்.

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் கிழ் இவ் வைத்தியாசலையில் காணப்படும் குறைபாடுகளை படிப்படியாக கிழக்கு மாகாணசபையூடாக நிவர்தி செய்து தருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாக,  வைத்தய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் கூறினார்.

இதன்போது சுகாதரா இராஜாங்க அமைச்சின் செயலாளர், பேள் வீரசிங்க, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்தய அதிகாரி எஸ்.சதுர்முகம், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: