9 Mar 2015

சுகாதார இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்விலிருந்து இடை நடுவே வெளியேறிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்- களுவாஞ்சிகுடியில் சம்பவம்.

SHARE
சுகாதார இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்ட நிகழ் வொன்றிற்கு வருகை தந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே இடையில் திரும்பி வீதிக்கு வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் தொடர்பல் மேலும் அறியவருவதாவது…

சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி ஞாயிற்றுக் கிழமை காலை  (08) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தார். அமைச்சர் வைத்தியசாலைக்கு வந்து வரவேற்று நிகழ்வு முடிவுற்று சற்று நேரத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடாரா ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மேற்படி வைத்தியசாலை முதலாவது நோயாளர் விடுதியைப் பார்வையிட்டு, இரண்டாவது விடுத்தியைப் பார்வையிடுதற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்நிகழ்வில் சற்று நேரத்திற்கு முன்னர் இணைந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மற்றும் மா.நடாரா ஆகிய இருவரும், இந்நிழ்வை தாம் பறக்கணிப்பதாகக் கூறி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

இந்நிகழ்வை பகிஸ்க்கரித்து வெளியேறியமைக்கான காரணம் என்ன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளையிடம் கேட்டபோது…..

தம்மை உரியமுறையில் இந்த வைத்தியசாலை நிருவாகமும், இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற இராஜாங்க அமைச்சரும், வரவேற்ககவில்லை, கிழக்கு மாகாண முதலமைச்சரும் இந்நிழக்வில் கலந்து கொள்வதாத தெரிவித்துதான் எமக்கு அழைப்பு விடுக்கப் பட்டது ஆனால் முதலமைச்சர் வரவில்லை அவர் வரும் வரையில் நாம்  வீதியில் காத்திருப்போம் என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வேளையில் இடைநடுவே ஏன் நிகழ்வை விட்டு வெளியேறீனீர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசாவிடம் கேட்டபோது….

எமக்கு மேற்படி வைத்திசாலை நிருவாகம் உரியமுறையில் அழைக்க வில்லை, நாம் கிழக்கு மாகாண முதலமைச்சர் வருவதாகத்தான் வந்துள்ளோம் இங்கு வந்து பார்த்த போதுதான் தெரிகிறது கிழக்கு மாகாண முதலமைச்சர் வரவில்லை என்று அதனால்தான் இந்நிகழ்வைப் புறக்கணித்துவிட்டு இடை நடுவில் வெளியேறினோம். என தெரிவித்தார்.

இவர்களின் கருத்துக்கள் தொடர்பில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனிடம் கேட்டபோது……

மத்திய அமைச்சலிருந்து சுகாதார இராஜாங்க அமைச்சர் எமது வைத்தியசலையைப் பார்வையிடுவதற்கு ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 வரவுள்ளதாக எமது தலைமைக்காரியாலயம் எமக்கு அறிவித்து. அதற்கான ஏற்பாடுகளை நான் மேற்கொண்டேன் மாறாக சுகாதார இராஜாங்க அமைச்சரைவிடவேறு எந்த அரசியல் வாதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவித்தல் விடுக்கப்பட வில்லை.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா ஆகியோர் எமது நிகழ்வு ஆரம்பித்து சற்று நேரத்திற்குப் பின்னர்தான்; வருகை தந்து இந்நிகழ்வில் இணைந்து கொண்டார்கள் அவர்களை வரவேற்றோம், பின்னர் அவர்களாகவே வெளியேறிச் சென்று விட்டார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பாகும். என தெரிவித்தார்.

இதனிடையே மேற்படி மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும்  இந்நிகழ்வைப் புறக்கணித்து விட்டு  வைத்தியசாலை வீதியில் நின்று கொண்டிருக்கiயில் அவ்விடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசிங்கம், மற்றும், மாகாண சபை உறுப்பினர் பி.இந்திரகுமார் ஆகியோர் நிகழ்வைப் புறக்கணித்து விட்டு நின்ற சக மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா ஆகிய  இருவரையும் சமாதானப்படுத்திக் கொண்டு பிறிதொரு நிகழ்விற்கு அழைத்துச் சென்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: