9 Mar 2015

முதலுதவிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்குச் சான்றிதழ்

SHARE
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் முதலுதவி பயிற்சி பெற்று அதன் பரீட்சையில் சித்தியடைந்த தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (07) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் கடந்த வருடம்; நடாத்தப்பட்ட அடிப்படை முதலுதவி பயிற்சி பரீட்சையில் சித்தியடைந்த 15 பேருக்கும், உயர்தர இதன்போது முதலுதவி பயிற்சி பரீட்சையில் சித்தியடைந்த 8 பேருக்கும், இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன். முதலுதவிப் போதனாசிரியர் ஆ.சோமசுந்தரம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்திய அதிகாரி கே.விவேகானந்தன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: