இந்த நாட்டிலுள்ள தற்போதைய அரசாங்கம்; தமிழினத்தை ஏமாற்ற முடியும் என நினைத்து செயற்பட்டால் அரசாங்கம் ஏமாந்து வீடு செல்ல வேண்டி ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள காக்காச்சிவட்டைக் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாக காக்காச்சிவட்டைக் கிராமத்தின் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (04) அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள காக்காச்சிவட்டைக் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாக காக்காச்சிவட்டைக் கிராமத்தின் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (04) அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தமிழ் இனத்தை அன்றும் ஏமாற்றினோம், இன்றும் எமாற்றினோம், நாளையும் ஏமாற்றுவோம் என நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, மற்றும், பிரதமர், ஆகியோர்;, நினைக்கக் கூடாது. இதற்குமேலும் தமிழினம், ஏமாற்றுகின்ற சூழ் நிலை உருவாகுமாயின் கடந்தகால தமிழ் மக்களின் வரலாற்றினை மீண்டும் திருப்பிப்பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படும்.
இதனை ஏன் நான் கூறுகின்றேன் என்றால் இந்த நாட்டை சேர்ந்தவன் என்ற வகையிலும் இந்த நாட்டை நேசிக்கின்றவன் என்ற வகையிலும் இந்த நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினை வாதம் உருவாகக் கூடாது இந்த நாடு உலகளாவிய ரீதியில் புகழ்பெறவேண்டும் நாட்டில் மக்கள் நின்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே இதனை நான் கூறுகின்றேன்.
இந்த நாட்டின் ஐனாதிபதியிடமும், பிரதமரிடமும், அமைச்சர்வாரியத்திடமும் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன் தமிழரின் வரலாறு தெரியாமல் தமிழரோடு விளையாட வேண்டாமென வினையமாக வேண்டி நிற்கின்றேன் அதை மீறி விளையாட நினைத்தல் பல விளையாட்டுக்கள் இந்த நாட்டில் மீண்டும் உருவாகும் ஆனாலும் அந்த விளையாட்டுக்களை விரும்பாதவன் என்ற வகையில் இதனை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிலையினை தவிர்க்க வேண்டுமாயின் அரசாங்கம் எமது தமிழினத்தினை எந்த வகையில் அரவணைக்க வேண்டுமோ அந்த வகையில் அரவணைத்து செல்ல வேண்டும் தமிழ்த் தலமையின் கருத்தினை செவிமடுத்து அதனை கருத்திலெடுத்து எதிகாலத்தில் செயற்பட வேண்டும். அல்லாத இடத்து பழைய பல்லவி பாடாவேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment