25 Mar 2015

தமிழர் பகுதியில் நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி எமது தமிழ் மொழியிலேயே நிற்சயமாக தேசியகீதம் பாடப்பட வேண்டும்.

SHARE
எமது கலை, கலாசாரத்தினையும் விழுமியத்தினையும் பாதுகாப்பதற்காக தற்போது எமது பிரதேசத்தில் விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுக் கொண்டு இருப்பதனையிட்டு நான் பெருமையடைகின்றேன். தற்போது ஒரு வாரமாக இந்த நாட்டிலே மிகவும் முக்கியமான பிரச்சினை ஒன்று சென்று கொண்டிருக்கின்றது. அந்த பிரச்சினையை நான் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி.இந்திரகுமார். தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி இளைஞர் முன்நேற்றக் கழகத்தின் 33வது விளையாட்டு விழா ஞாயிற்றுக் கிழமை (22)  களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்த தெரிவிக்கையில்….

இலங்கையில் தற்போது தேசிய கீதமானது தமிழில் பாடப்பட வேண்டும். என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப் பட்டுள்ளது அந்த ரீதியில் கடந்த காலத்தில் எமது பிரதேசங்களில் பெரும்பான்மை மொழியில் பாடப்பட்டு வந்ததை நான் நன்கு அறிவேன். ஆனால் தற்போது தமிழர் பகுதியில் நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி எமது தமிழ் மொழியிலேயே நிற்சயமாக தேசியகீதம் பாடப்பட வேண்டும் என நான் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன். நாங்கள் எங்களது மொழிக்காகவும் எமது இனத்தக்காகவுமே பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றோம். எனவே ஒரு போதும் வேறு மொழியில் தேசியகீதம் பாடப்படக் கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயமொன்றினை  கிழக்கு மாகாண சபை சார்பாக  முதன்முறையாக கிழக்கு மாகாண ஆளுனர் மக்களிடம் குறை நிறைகளை கேட்டறிவதற்காக வருகைதந்திருந்தார். இவருடன் வருகைதந்த முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரும், வருகை தந்திருந்தனர். இவர்கள் அனைவரும் இங்கு வந்து ஒரு சமூகம் சார்ந்த குறைகளையே கேட்டறிந்தனர் அதாவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை இன மக்களின் இடம் பெயர்வுகள் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள். போன்றவற்றை மாத்திரமே கேட்டறிந்து கெண்டுள்ளனர். இந்த விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் இந்த கிழக்கு மாகாண சபையிலே ஏன் பங்காளிகளானோம் எமது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே! நாங்கள் இந்த மாகாண சபையிலே பங்காளிகளானோம். அந்த ரீதியில் இவ்வாறு கிழக்கு மாகாண சபையானது செயற்படுவது தமிழ்; மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தைத் தூண்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக எங்களுக்கு தெரியாமால் எங்களை அழையாமல் கிழக்கு மாகாண ஆளுனரினதும், கிழக்கு மாகாண அமைச்சர்களினதும், மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டமைக்கான காரணத்தினை நாங்கள் அறிய விரும்புகின்றோம்.

இது மாகாண ஆளுனரின் நிகழ்சிச்சி நிரலாக இருந்தாலும் முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மூவின மக்களின் குறை நிறைகளை கேட்டறிவதற்கான ஆலோசனைகளை முன்வைத்திருக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மக்களிடம் சந்தேகத்தினை ஏற்படுத்தும் செயற்பாடகவே நாங்கள் பாரக்க வேண்டியுள்ளது. இந் நிலை தொடர்ந்தால் எமது மக்களை நாங்கள் தெளிவு படுத்த வேண்டிய நிலையேற்படும் என்பதனை  ஆளுனர் அவர்கட்கு கூறிவைக்க விரும்புகின்றேன். எனவே இது போன்ற பக்கச்சார்பான விஜயங்களை மேற் கொள்வதனை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது  கிழக்கு மாகாண சபையிலே தமிழ் மக்கள் புறந்தள்ளி வைக்கப்பட்டனரஷ அப்போது வழங்கப்பட்ட பெற்ற அரச நியமனங்கள் சட்டத்திற்கு முரணாக இடம் பெற்றுள்ளது. இதற்காக நாங்கள் நீதி மன்றத்தினை நாடியிருக்கின்றோம். இதற்கான தீர்வினை எதிர்காலத்தில் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை ஆளுனர் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் வாரியமும் சேர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்ட அவர்களிடமும் குறை நிறைகளை கேட்டறிய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் யுத்தத்தால் இடம்பெயர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்கள் ஏராளம் உள்ளனர் என்ற செய்தியையும் கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த கிழக்கு மாகாண சபையிலே ஏன் நாங்கள் பங்காளியானோம். நாங்கள் பங்காளியானதன் காரணம் எமது தமழ் மக்களின் அபிலாசைகளையும் அவர்களின் குறைகளையும் தேவைப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கவே என்பதனை எவரும் மறந்து விடமுடியாது என அவர் தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: